பெல்ஜியத்தில் குர்ஆனை எரிக்க முயன்ற ஐந்து பேர் நாடு கடத்தல் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

பெல்ஜியத்தில் குர்ஆனை எரிக்க முயன்ற ஐந்து பேர் நாடு கடத்தல்

பெல்ஜியத்தின் பெலாரஸ் நகரில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதியில் புனித குர்ஆனை எரிப்பதற்கு திட்டமிட்ட டென்மார்க் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர்கள் நாடு கடத்தப்பட்டு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல் என்று இதனை பெல்ஜியம் இராஜாங்கச் செயலாளர் அசிலம் சமி தெரிவித்துள்ளார். 

டென்மார்க் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ரஸ்முஸ் புலுடனுடன் ஐவரே இந்த செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக அவர்களின் பேஸ்புக் பக்கங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பாரிஸ் நகரில் அல்குர்ஆனை எரிப்பது குறித்து தனது திட்டத்தை வெளியிட்டதை அடுத்து புலுடன் கடந்த புதன்கிழமை பிரான்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொரோக்கோ நாட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியிலேயே இந்த ஐவரும் குர்ஆனை எரிக்க முயன்றதாக பெல்ஜியம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment