கொவிட் - 19 சட்டமூலத்தை தயாரிக்கும் நீதி அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

கொவிட் - 19 சட்டமூலத்தை தயாரிக்கும் நீதி அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

(க.பிரசன்னா)

கொவிட் 19 (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்திற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு இன்று அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று நிலைமையால் தற்போது நீதிமன்றங்களில் காணப்படும் வழக்கு நடவடிக்கைகளுக்கு ஏற்ப நீதி வழங்குவதற்காக குறித்த அனைத்து தரப்பினர்கள் மற்றும் ஆட்களுக்கும் சட்ட பாதுகாப்பு வழங்கும் வகையில் குறித்தவொரு நிலையான தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேவை உருவாகியுள்ளது.

குறிப்பாக நிலையான காலப்பகுதியில் நடவடிக்கையெடுப்பதற்காக ஏதேனுமொருவருக்கு கொவிட் 19 தொற்று நிலைமையால் குறித்த காலப்பகுதியைத் தவிர்த்து குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்ட ஏற்பாடுகளை தயாரித்தல் உகந்ததென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய அடையாளங் காணப்பட்ட குறித்த விடயங்களை உள்ளடக்கியதாக குறித்த ஏற்பாடுகளை தயாரிப்பதற்காக கொவிட் 19 (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்திற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad