பிரதேச அடிப்படையில் 10 பல்கலைக்கழங்கள் - கல்வி அமைச்சர் ஜி.எல். பீறிஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

பிரதேச அடிப்படையில் 10 பல்கலைக்கழங்கள் - கல்வி அமைச்சர் ஜி.எல். பீறிஸ்

(இராஜதுரை ஹஷான்)

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்துக்கு அமைய பிரதேச அடிப்படையில் 10 பல்கலைக்கழங்களை உருவாக்குதல் குறித்து கல்வி அமைச்சர் ஜி.எல். பீறிஸ் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. கல்வி அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை இடம் பெற்றுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படாத தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை அமைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரத்தை பெற்றுக் கொள்ளவும், மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

புதிய கல்வி கொள்கை அதிக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் மாற்றியமைக்கப்படும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் கல்வித்துறைக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. இச்சவாலை நவீன தொழினுட்ப வழிமுறைகள் ஊடாக எதிர்க் கொள்ள வேண்டும்.

புதிய பாடத்திட்டம் சுய கற்றல் முறைமையினை அடிப்படையாக கொண்டதாக உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment