நிலாவெளியில் 1,050 போதை மாத்திரைகளுடன் பெண் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

நிலாவெளியில் 1,050 போதை மாத்திரைகளுடன் பெண் கைது

திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயிரத்து 50 போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நிலாவெளி, ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.

நிலாவெளி பிரதேசத்தில் கடை ஒன்றினை உடைத்து பொருட்களை திருடியதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவலையடுத்தும், திருடிய பொருட்களை வீடு ஒன்றினுள் மறைத்து வைத்திருப்பதாக வழங்கப்பட்ட தகவலையடுத்தும் அவ்வீட்டை சோதனையிட்டபோது வீட்டுக்குள் இருந்து 1,050 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad