இலங்கையை விட்டு வெளியேற ஒத்துழைப்பு வழங்கிய உதவியாளருக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

இலங்கையை விட்டு வெளியேற ஒத்துழைப்பு வழங்கிய உதவியாளருக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடல் எல்லையை தாண்டுவதற்கு குடும்பமொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் சைலவன் காயத்திரி உத்தரவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தப்பிச் சென்றிருந்தனர். 

அவர்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பை கடப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தொண்டைமனாற்றைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் நேற்று (09) காலை வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அவர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோது, அவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை தனிமைப்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(நாகர்கோவில் விஷேட நிருபர் - ஜெகதீஸ் சிவம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad