கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவல் - 1 கோடியே 70 லட்சம் கீரிகளை அழிக்க டென்மார்க் அரசு உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவல் - 1 கோடியே 70 லட்சம் கீரிகளை அழிக்க டென்மார்க் அரசு உத்தரவு

டென்மார்க்கில் மின்க் எனப்படும் ஒருவகை கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வவ்வால்கள் மூலமாக கொரோனா பரவியதாக தகவல்கள் வெளியானது. 

தற்போது, கொரோனா வைரஸ் உலகின் 213 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

மனிதர்களை போலவே பூனை, சிங்கம், நாய், புலி ஆகிய விலங்குகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டென்மார்க் நாட்டில் பண்ணைகள் மூலம் மிங்க் வகை கீரிகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கீரிகள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறைச்சி உணவிற்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மிங்க் வகை கீரியிடம் கொரோனா பரவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள கீரி வளர்ப்பு பண்ணையில் வேலை செய்பவர்கள், அவர்கள் தொடர்புடையவர்கள் என 214 பேருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களுக்கு எவ்வாறு கொரோனா பரவியது என நடத்திய ஆராய்ச்சியில் பண்ணையில் வளர்க்கப்பட்ட மிங்க் கீரிகள் மூலமாக வைரஸ் பரவியது தெரியவந்தது. 

மிங்க் மூலம் பரவிய கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மற்றவர்களை போல இல்லாமல் வைரசின் வீரியம் மிகவும் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இது கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதையடுத்து, டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் வளர்க்கப்படும் 1 கோடியே 70 லட்சம் மிங்க் வகை கீரிகளை அழிக்க அந்நாட்டு பிரதமர் மீடி ஃப்ரிடெர்கிசன் உத்தரவிட்டுள்ளார். 

வைரசின் பரிணாம வளர்ச்சியை தடுக்கவும், எதிர்க்காலத்தில் தயாராக உள்ள கொரோனா தடுப்பூசியின் தன்மையை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad