மாகந்துரே மதுஷ் சுட்டுக் கொலை : மோட்டார் சைக்கிள் தொடர்பான ரகசிய CCTV காணொளி! - News View

Breaking

Post Top Ad

Tuesday, October 20, 2020

மாகந்துரே மதுஷ் சுட்டுக் கொலை : மோட்டார் சைக்கிள் தொடர்பான ரகசிய CCTV காணொளி!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் மாகந்துரே மதுஷ் இன்று காலை சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை சுட்டுக் கொலை செய்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் என்று அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீட்டுத் திட்டம் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு மாகந்துரே மதுஷ் தகவல் வழங்கிய நிலையில், அவரை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். 

இதன்போது பொலிஸாருக்கும் பாதாள குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதன்போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சந்தேகநபர்கள் வீதியில் விழுந்தனர்.

குறித்த இடத்திற்கு பொலிஸார் செல்ல முற்பட்ட போதும் சந்தேகநபர்கள் தம்மிடம் இருந்த கைக்குண்டை வெடிக்கச் செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிறுந்த நிலையில் அவர்கள் விட்டுச் சென்ற மோட்டர் சைக்கிள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. 

இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு திருடப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

வெள்ளவத்தை, மரைன் டிரைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இளைஞரின் மோட்டார் சைக்கிள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) திருடப்பட்டதாகக் தெரிவித்து குறித்த இளைஞர் வெள்ளவத்தை, போலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வெள்ளவத்தை, சவோய் திரையரங்குக்கு அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி சார்லமண்ட் சாலை வழியே நகர்த்திச் செல்லும் சிசிடிவி காணொளியை கண்டு பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad