யட்டியாந்தோட்டை நகருக்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் நேற்றிரவு (01) 8.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பில் யட்டியாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் விரைந்து செயற்பட்டதோடு, மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு, அவிசாவளை தொழிற்றுறை தீயணைப்பு பிரிவு, ருவன்வெல்ல பிரதேச சபையின் நீர் பவுசர் ஆகியவற்றின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இத்தீ விபத்துக் காரணமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்பதோடு, இதுவரையில் சேத விபரம் மதிப்பிடப்படவில்லை எனவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யட்டியாந்தோட்டை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment