அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ட்ரம்புக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது ட்ரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். ஹோப் ஹிக்சுக்கு தொற்று உறுதியானதையடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வரவில்லை.
தனது உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை நேற்று இரவு உறுதி செய்தார் ட்ரம்ப். அத்துடன், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறி உள்ளார்.
‘சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸ், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பயங்கரம்! நானும், நாட்டின் முதல் குடிமகளும் எங்கள் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அதேசமயம் எங்களை தனிமைப்படுத்தும் நடைமுறையையும் தொடங்குவோம்’ என ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment