சைபர் இணைய ஊடுறுவல் தாக்குதலுக்கு நானும் அகப்பட்டேன் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ, தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சைபர் இணைய ஊடுறுவல் தொடர்பாக ருவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சைபர் மிரட்டல் மிகவும் கடுமையான குற்றம். அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். சைபர் இணைய ஊடுறுவலில் அனைவரும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த இணைய ஊடுருவலில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவேதான் அதன் தாக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்
சைபர் மிரட்டலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இணைய அச்சுறுத்தல் அல்லது இணைய துன்புறுத்தல் என்பது மின்னணு வழிகளைப் பயன்படுத்தி கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தலாகும்.
தொழில்நுட்பம் முன்னேறியுள்ளமையினால் குறிப்பாக இளைஞர்களிடையே இது அதிகரித்து வருவதாக பெரும்பாலானோரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment