நாடு முழுவதும் ஊரடங்கை அமுலாக்கும் தேவை தற்போதைக்கு எழவில்லை - பொலிஸ் ஊடக பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

நாடு முழுவதும் ஊரடங்கை அமுலாக்கும் தேவை தற்போதைக்கு எழவில்லை - பொலிஸ் ஊடக பேச்சாளர்

நாடு முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைத் தனிமைப்படுத்தும் வகையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லையென பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

நேற்றுக் காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், அவ்வாறானதொரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே முடிவு எடுக்கப்படும்.

சிலவேளை மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டி வந்தாலும் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும். நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்லுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment