சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா

சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டு வரப்படும் என நம்பிக்கை உள்ளதாக பருக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் திகதி இந்திய மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. 

மேலும், அப்பகுதியை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

இந்த நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் முதலமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 

தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்ததையடுத்து வீட்டுக் காவலில் இருந்த முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டுக் காவலில் இருந்த மெகபூபா முப்தியூம் சமீபத்தில் விடுதலையானதையடுத்து, பரூக் அப்துல்லா வீட்டில் இன்று அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி உள்ளிட்ட காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் திகதி (சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு முந்தைய நாள்) நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட குப்கார் பிரகடனம் குறித்து விவாதிக்கப்பட்டது.

குப்கார் பிரகடனம் என்பது காஷ்மீரின் சுய ஆட்சி, சிறப்பு அந்தஸ்து, தனித்தன்மையை ஒருங்கிணைந்து பாதுகாக்க அனைத்து கட்சியும் துணைற்கும் என உறுதிபூண்டுள்ளனர். 

மேலும், இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக் கட்சி உட்பட காஷ்மீரின் முக்கிய அரசியல் (பாஜக, காங்கிரஸ் தவிர) கட்சிகள் இணைந்து எடுத்த முடிவாகும்.

இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ‘இந்த கூட்டணிக்கு ’குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி’ என பெயரிட்டுள்ளோம். நமது போராட்டம் அரசியலமைப்புக்கான போராட்டம். காஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் திகதிக்கு முன்னதாக கொண்டிருந்த உரிமைகளை இந்திய அரசு திருப்பித்தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

இதற்கிடையில், கடந்த 11ம் திகதி ’இந்தியா டுடே’ ஆங்கில ஊடகத்திற்கு பரூக் அப்துல்லா சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். 

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் திகதி இந்திய அரசு செய்த நடவடிக்கை (சிறப்பு அந்தஸ்து ரத்து) ஏற்றுக் கொள்ள முடியாதது. லடாக் எல்லையில் சீன ராணுவம் தற்போது ஆக்ரோஷமாக செயல்படுவதற்கு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டம் ரத்து செய்யப்பட்டதே காரணம் ஆகும்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. சீனாவின் ஆதரவுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவரப்படும் என நான் நம்புகிறேன்.

நான் ஒருபோது சீன ஜனாதிபதியை அழைக்கவில்லை. இந்திய பிரதமர் மோடி தான் சீன ஜனாதிபதியை அழைத்தது மட்டுமல்லாமல் அவருடன் ஊஞ்சல் ஆடினார். அவர் சீன ஜனாதிபதியை சென்னைக்கு அழைத்துக் கொண்டு அவருடன் உணவும் அருந்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment