மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான வரத்தக நகரங்கள் இன்று மாலை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளர் கோ.செம்பகவள்ளி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்கம், குடா மஸ்கெலியா ஆகிய நகரங்களிலும் கவிரவலவில் உள்ள கிராமத்தில் உள்ள வர்த்தக நிலையங்களும் இன்று மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்படும் என மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளர் கோ.செம்பகவள்ளி கூறினார்.
இதன்படி, குறித்த நகரங்கள் அனைத்தும் எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் கொவிட்-19 பரவாமல் இருக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவும் பட்சத்தில் மீண்டும் தொடர்ச்சியாக மூட வாய்ப்புள்ளது எனவும் இப்பிரதேச மக்கள் நலன் பேணவும் மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான வேண்டுகோளை மஸ்கெலியா சாமிமலை வர்த்தக சங்கங்களினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துடனும் அவர்களின் கடித மூல வேண்டுகோளுக்கு இணங்கவே இந்நடவடிக்கை மேற்கொண்டதாக தவிசாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment