ஓட்டமாவடியில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகங்களுக்கு தொற்று நீக்கி மருந்து விசிறல் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

ஓட்டமாவடியில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகங்களுக்கு தொற்று நீக்கி மருந்து விசிறல்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை கொரோணா நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபரின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கொரோணா நோயினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கமைய பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வுகளும் மருந்து தௌிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் குறித்த பிரதேசத்தில் உள்ள கோட்ட கல்வி அலுவலகம், நீர்ப்பாசன திணைக்கள காரியாலயம், நூலகங்கள், பொது சந்தை, வியாபார நிலையங்கள் உட்பட்ட பல்வேறு இடங்களில் தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தில் பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad