மாணவர்களுக்கு இலக்கு வைத்து கஞ்சா கலந்த பாபுல் போதைப் பொருள் விற்பனை - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

மாணவர்களுக்கு இலக்கு வைத்து கஞ்சா கலந்த பாபுல் போதைப் பொருள் விற்பனை

புத்தல பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களையும், மேலதிக வகுப்புக்கு வரும் மாணவர்களையும் இலக்கு வைத்து கஞ்சா கலந்த பாபுல் போதைப் பொருளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனனர்.

அங்கு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5,300 கஞ்சா கலந்த பாபுல் போதைப் பொருள் பொதி கைப்பற்றப்பட்டதுடன் ஒவ்வொரு பொதியும் 10 ரூபாவுக்கு விற்கப்பட இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மிகவும் சூட்சுமான முறையில் புத்தல நகரில் இந்த வியாபார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

57 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளனர்.

No comments:

Post a Comment