வாடகை வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் அறிவித்தல் - News View

Breaking

Post Top Ad

Monday, October 12, 2020

வாடகை வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் அறிவித்தல்

(செ.தேன்மொழி) 

வாடகை வாகனங்களை செலுத்தும் சாரதிகள், தங்களது வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் விபரங்களை அறிந்து கொள்வதற்காக முறையொன்றை கையாள வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். 

மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ள நபர்களை கண்டறிவதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் பல முயற்சிகளை எடுத்துள்ளனர். அதற்கமைய பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த தொற்றாளர்கள் வாடகை வாகனங்களை பயன்படுத்தியிருந்தால், இதன்போது அவர்களுடன் இன்னும் நபர்கள் சென்றுள்ளார்களா என்பது தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

அதனால், இவ்வாறான வாடகை வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தங்களது வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் தகவலை அறிந்து கொள்வதற்காக முறையொன்றை கையாள வேண்டும். இதன்போது சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad