இரு பெண்களின் சடலங்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

இரு பெண்களின் சடலங்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது

மிருகங்களுக்காக சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை வனப் பகுதியில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஹெம்மாத்தகம - அம்பதெனிய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கி குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். 

அம்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 67 மற்றும் 36 வயதான இரு பெண்களே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். 

குறித்த மின் வேலியானது சட்ட விரோதமான முறையில் மிருகங்களுக்காக அமைக்கப்பட்டது என்பதால் குறித்த பெண்களின் மரணம் தொடர்பில் ஏற்படும் சட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே சந்தேகநபர் இரு சடலங்களையும் அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள வனப் பகுதியில் மறைத்து வைத்துள்ளார் என ஹெம்மாத்தகம பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

சோதனை நடவடிக்கைகளின் போது சடலங்கள் இரண்டும் அழுகிய நிலையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment