அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது ட்ரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டயடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார். 

இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில், இருவருக்கும் பொசிட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அத்துடன், உடனடியாக தனிமைப்படுத்தும் நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment