சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் யோஷித்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் யோஷித்த ராஜபக்ஷ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ, இலங்கை கடற்படையிலிருந்து அதிகாரப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக யோஷித்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதையடுத்து கடற்படை பதவியிலிருந்து யோஷித்த இராஜினாமா செய்தாரா என சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பட்டிருந்தன. 

அதற்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், ஒக்டோபர் 10 ஆம் திகதி இராஜினாமா செய்வதற்கான கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்ததாகவும், அதைத் தொடர்ந்து ஒக்டோபர் 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப் பணியாளராக கடமைகளை ஏற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். 

யோஷித்த ராஜபக்ஷ இலங்கை கடற்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 08 மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்ய விண்ணப்பித்ததாகவும், அவரது கோரிக்கையை ஒக்டோபர் 10 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் பிரதமரின் அலுவலக பிரதானியாக யோஷித்தவை நியமிக்க அமைச்சரவை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஒப்புதல் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 15 ஆம் திகதி தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment