தனது ஆலோசகரை பிரதமராக நியமித்தார் ஜோர்தான் மன்னர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

தனது ஆலோசகரை பிரதமராக நியமித்தார் ஜோர்தான் மன்னர்

ஜோர்தான் நாட்டின் புதிய பிரதமராக தனது ஆலோசகராக இருந்து வந்த பிஷ் கசாவ்னேயை நேற்றுமுன்தினம் மன்னர் அப்துல்லா நியமனம் செய்துள்ளார்.

அரபு நாடான ஜோர்தானில் பிரதமராக உமர் ரசாஸ் பதவி வகித்து வந்தார். அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை மன்னர் அப்துல்லா ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து அவர் அந்த நாட்டின் புதிய பிரதமராக தனது ஆலோசகராக இருந்து வந்த பிஷ் கசாவ்னேயை நேற்று முன்தினம் நியமனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக பிஷ் கசாவ்னேவுக்கு மன்னர் அப்துல்லா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் புதிய பிரதமர் தனது அமைச்சரவையை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருகின்ற வேளையில், மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை புதிய அரசு எடுக்க வேண்டும் என்று மன்னர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment