பதுளை அரச மருந்தக ஊழியருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

பதுளை அரச மருந்தக ஊழியருக்கு கொரோனா!

பதுளை தியத்தலாவையில் அரச மருந்தகமொன்றின் ஊழியரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த மருந்தகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த மருந்தகத்தில் கடமையாற்றிய அனைவரையும் பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுதர்சன் தெரிவித்தார். 

இதையடுத்து குறித்த மருந்தகத்திற்கு கடந்த சில தினங்களில் மருந்து வகைகளை பெற்றுக் கொள்ள வந்தவர்களையும் இனம் காணும் செயற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பரிசோதகர் எஸ். சுதர்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment