பதுளையில் மரண நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

பதுளையில் மரண நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா தொற்று உறுதியான ஒருவர் பதுளை ஸ்பிரிங்வெளி - மேமலை பெருந்தோட்டத்தின் மரண வீடொன்றிற்கு சென்று வந்ததையடுத்து அம்மரண நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மேமலை பெருந்தோட்டத்தில் கணேசன் முத்தம்மாள் என்ற 69 வயது பெண் கடந்த 25- 10-2020 அன்று உயிரிழந்ததையடுத்து அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள ஹட்டனிலிருந்து எஸ். சிவராஜா என்ற நபர் சென்றுள்ளார். 

இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்து வந்தவராவார். மேற்குறிப்பிட்ட இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட குறித்த நபர் மீளவும் ஹட்டன் சென்றதும் அவர் மீது சந்தேகம் கொண்ட ஹட்டன் பொலிசாரும் சுகாதாரப் பிரிவினரும் அந்நபரை பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தினர். 

அப்பரிசோதனையில் குறித்த நபருக்கு “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குறித்த நபருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கும்படி பொலிசார் கேட்டுள்ளனர். 

இத்தகவல் பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கவே பொலிசாரும், பதுளை சுகாதார பிரிவினரும் நேற்று 26-10-2020 மேற்படித் தோட்டத்திற்கு விரைந்துள்ளனர். 

குறித்த மரண வீட்டில் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தி, பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

அத்துடன், அத்தோட்டத்திற்குள் வெளியார் எவரையும் பிரவேசிக்கவோ இத்தோட்டத்திலுள்ளவர்கள் வெளியில் செல்லாதிருப்பதற்கும் பூரண தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பதுளைப் பொலிசாரும், பதுளை சுகாதார பிரிவினரும் இணைந்தே மேற்படி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

 இந்நிலையில் பதுளை - மேமலை பெருந்தோட்டம் போன்றே பதுளை - ரொசட் பெருந்தோட்டப் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment