பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா!

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த 23 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் கங்கேவத்த பிரிவில் உள்ள 41 வயதுடைய குறித்த நபருக்கும் அவரின் மனைவிக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவரது வீட்டார் இருவரும் அயலவர் நால்வரும் மேலும் மஸ்கெலியா நகரில் மீன் விற்பனையில் ஈடுபட்டவர்கள், சின்ன சோலகந்தை பிரிவில் உள்ளவர்கள் அடங்கலாக 26 பேருக்கு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் தற்போது அவரின் மனைவிக்கு நேற்று (26.10.2020) மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைக்கமைவாக (27.10.2020) இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த குறித்த நபர் கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று மீண்டும் பெலியகொடைக்கு வந்துள்ளார். இதன் போது அவர் மஸ்கெலியா நகரில் பல இடங்களுக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா, சாமிமலை நகரங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment