மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சில பிரதேசங்களில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த திருட்டுச் சம்பவங்களின் சந்தேகநபர்கள் இருவர் திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிளியுகே. ஜயந்த தெரிவித்துள்ளார்.
இவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் மலிகைக்கடை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஏறாவூர் பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜி. உதயகுமார தலைமையிலான குழுவினர் இது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொம்மாதுறை, செங்கலடி மற்றும் எல்லை வீதி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள மலிகைக் கடைகளில் பெருந்தொகையான பொருட்களைக் கொள்ளையிட்ட நபரிடமிருந்து பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கிரான் கோரகல்லிமடு பிரதேச வீடொன்றில் சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணத்தைக் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த ஆபரணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் ஏறாவூர் சுற்றலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment