ரயில், பஸ் நாளாந்த வருமானம் வீழ்ச்சி - உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ரயில் சேவைகள் தடையின்றி இடம்பெறும் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

ரயில், பஸ் நாளாந்த வருமானம் வீழ்ச்சி - உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ரயில் சேவைகள் தடையின்றி இடம்பெறும்

கொவிட்-19 வைரசு தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் தடையின்றி இடம்பெறும்.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக மக்களின் பயணங்கள் வரையறுக்கப்பட்டதை அடுத்து ரயில்வே திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 10 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சி கண்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக நாள் ஒன்றுக்கு திணைக்களத்தின் வருமானம் சுமார் 15 மில்லியன் ரூபாவாகும். தற்போதைய சூழ்நிலையில் இது ஐந்து மில்லியன் ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதேவேளை, இந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு ரயில் பயணங்களை குறைப்பது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில் வண்டிகள் தொடர்ந்து சேவைகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 30 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சி கண்டிருப்பதாக அதன் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment