நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இடங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகை விகாரைக்கு வருகை தருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளிலிருந்து ஸ்ரீ தலதா மாளிகைக்கு பிரவேசிப்பவர்கள், தங்களது பிரதேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையைக் கொண்டு வரவேண் டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஸ்ரீ தலதா மாளிகையில் மத வழிப்பாட்டு அனுஷ்டானங்கள் வழமை போல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கைகளைக் கழுவி, உடல் வெப்பநிலை அவதானிக்கப்பட்டதன் பின்னரே அனைவரும் ஶ்ரீ தலதா மாளிகைக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தியவடன நிலமே அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment