(லியோ நிரோஷ தர்ஷன்)
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க் டி. எஸ்பர் ஆகியோரின் இலங்கைக்கான விஜயம் வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
கட்டார் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க புலானாய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் நேற்று நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.
பிரத்தியேக வாகனங்களும் கொழுப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தெற்காசியாவிற்கான விஜயத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ முன்னெடுத்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த விஜயம் 30 ஆம் திகதி வரை தொடர்வதுடன், இந்தியா, இலங்கை, மாலைத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கானது என அமெரிக்க இராஜாங்க தினைக்களம் அறிவித்துள்ளது.
இந்திய விஜயத்தை நிறைவு செய்தப் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ஆர். பொம்மியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க்டி. எஸ்பர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
No comments:
Post a Comment