நாட்டிலுள்ள சகல குர்ஆன் மத்ரஸாக்கள், மக்தப்கள், அஹதிய்யாப் பாடசாலைகள், ஹிப்ழ் மத்ரஸாக்கள், அரபிக் கல்லூரிகள் ஆகியவற்றை, (05) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
எனினும், மத்ரஸா விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும், அவர் மத்ரஸா நிர்வாகிகளைக் கேட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டிலுள்ள சகல (மஸ்ஜித்கள்) பள்ளிவாசல்களிலும் கோவிட் - 19 தொடர்பிலான அறிவுறுத்தல்களையும், ஒழுங்குகளையும் தொடர்ந்து கடைபிடிக்குமாறும், அவர் மஸ்ஜித் நிர்வாகிகளை வேண்டியுள்ளார்.
அத்துடன், நாட்டில் நிலைமை சீராக, பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும், அவர் அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
No comments:
Post a Comment