பிரதமரின் அலுவலக பிரதானியாக யோஷித்த நியமனம் - சீனா வாழ்த்து - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

பிரதமரின் அலுவலக பிரதானியாக யோஷித்த நியமனம் - சீனா வாழ்த்து

யோஷித்த ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

யோஷித்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி பதில் சீன தூதுவர் யோசித்த ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் அண்மையில் இலங்கை வந்த சீனக் குழுவின் விஜயம் தொடர்பிலும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேசப்பட்டதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad