கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்குச் சொந்தமான கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு செயற்குழுக்கள் தொடர்பிலும், அவை செயற்படவுள்ள முறைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.
அத்துடன் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான அடிப்படையான விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதில் தனி மனித திறமைகளை இனம்கண்டு அவர்களின் திறமைகளை பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதற்காக உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் சுற்றுலாத் துறைகளுடன் சம்பந்தப்பட்ட கிராமங்களை சரியான முறையில் வழிநடத்துதல், விவசாய நிலங்களை வளப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன டெனிபிடிய, பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment