நாளை (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 05.00 மணி வரையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் நாளைய தினம் அதாவது (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 05.00 மணி வரையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைவாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக கொவிட் 19 வைரசு தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 02 ஆம் திகதி காலை 05.00 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது இந்த அறிக்கை வெளியிடப்பட்டும் சந்தர்ப்பம் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாத பிரதேசத்திற்கு மாத்திரம் ஆகும்.
தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நவம்பர் மாதம் 2ஆம் திகதி திங்கட்கிழமை காலை 05.00 மணிக்குப் பின்னரும் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும்.
இதேபோன்று வெள்ளிக்கிழமை மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதினால் தற்பொழுது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரததேசத்தில் அத்தியாவசிய உணவு பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் நாளை (29) காலை 08.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையில் திறக்கப்பட வேண்டும்.
நவம்பர் மாதம் 02ஆம் திகதிக்குப் பின்னர், இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் வாரத்தில் 02 நாட்களுக்கு திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment