ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தற்போது நாட்டில் வியாபகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னாயத்த நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் சம்பந்தமாக சகல உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஸ் அனுப்பி அறிவுறுத்தல்களை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிவுறுத்திலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மாவட்ட கொரோனா வைரஸ் தொற்று தவிர்ப்பு தொடர்பான செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக பின்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மத வழிவழிபாட்டுத் தலங்களில் இடம்பெறுகின்ற பூசைகளில் மக்கள் கலந்து கொள்வதைத் தவிர்த்தல்.
சிகையலங்கார நிலையங்களைப் பூட்டுதல்.
விளையாட்டு மைதானம் உட்பட பொதுவான இடங்களை அடையாளப்படுத்தி சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலுக்கமைய அங்கு பொதுச் சந்தைகளை நடாத்துதல்.
தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைந்துள்ள இடங்களுக்குள் வருகின்ற அலுவலகங்களில் 50 வீதமான உத்தியோகத்தர்களைக் கொண்டு நாளாந்த அலுவலகக் கடமைகளை நிறைவு செய்தல்.
தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் சேருகின்ற திண்மக் கழிவுகளை அப்பிரதேசத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலுக்கமைய மேற்கொள்ளுதல் வேண்டும்.
இந்த விடயங்கள் ஒக்ரோபெர் 27 முதல் நவம்பர் 02 வரை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்படுள்ளது.
No comments:
Post a Comment