கட்டான, அக்கரபணஹ பிரதேசத்தில் சுமார் 30 மில்லியன் ரூபா (ரூ. 3 கோடி) பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, காரொன்றில் வந்த 5 பேரைக் கொண்ட குழுவினர் துப்பாக்கியை காட்டி, வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இக்கொள்ளையை புரிந்துள்ளனர்.
குருணாகல், தம்புத்தேகம, நிக்கவெரட்டிய, கம்பஹா பகுதிகளிலிருந்து இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேகநபர்களிடமிருந்து 7.2 மில்லியன் ரூபா பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நீர்கொழும்பு மற்றும் கட்டான பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment