குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

போலி சாட்சியங்களை உருவாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபர்களை இன்று (30) கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, இவ்விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் நான்காவது சந்தேகநபர் அண்மையில் சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததை தொடர்ந்து, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபராக ஷானி அபேசேகர பெயரிடப்பட்டுள்ளதோடு, இரண்டாவது சந்தேகநபராக எம்பிலிப்பிட்டி பொலிஸில் இணைக்கப்பட்டு சேவை புரிந்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் பெயரிடப்பட்டுள்ளார். 

இவ்வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான நாட்டை விட்டு வெளியேறியுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை கைது செய்வதற்கு சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment