களனி பல்கலைக்கழகம் உட்பட மூன்று கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கவும் - News View

About Us

About Us

Breaking

Monday, October 5, 2020

களனி பல்கலைக்கழகம் உட்பட மூன்று கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கவும்

களனி பல்கலைக்கழகம், யக்கல விக்ரமாரச்சி ஆயுர்வேத கல்வியகம் மற்றும் நய்வல உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

விடுமுறை வழங்கப்பட்ட பின்னர், வீடுகளுக்குச் சென்றுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களை இன்று (05) முதல் ஒருவார காலத்திற்கு மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று (04) தீர்மானம் எடுத்தது.

இதேவேளை, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் விடுதிகளை விட்டு விரைவில் வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திவுலபிட்டி பிரதேசத்தில் பெண்ணொருவரும் அவரது மகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, குறித்த கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment