கொரோனாவால் காது கேட்கும் திறன் இழப்பு - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் - News View

About Us

About Us

Breaking

Friday, October 16, 2020

கொரோனாவால் காது கேட்கும் திறன் இழப்பு - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கும், ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி பாதிக்கும் என கண்டறியப்பட்டிருந்தது. 

இந்த வரிசையில் இப்போது கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன் பல்லைக்கழக கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் நடத்திய ஆய்வில், கொரோனா வைரசால் ஏற்படுகின்ற பக்க விளைவு, செவித்திறன் இழப்பு என்றும், அதே நேரத்தில் உடனடியாக சரியான ஸ்டீராய்டு சிகிச்சை எடுக்கிறபோது, மீண்டும் கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

‘பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு கொரோனா தாக்கியபோது, பல்வேறு சிக்கல்கள் எழுந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து, ஸ்டீராய்டு மருந்துகள் அளித்தும், ரத்தம் செலுத்தியும் அவர் குணம் அடைந்தார். ஆனால் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்தன.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், வைரசால் ஏற்படுகிற அழற்சியும், உடலில் ரசாயனங்கள் அதிகரிப்பும் காது கேட்காமல் செய்து விடுகிறது என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment