நாளை 05ஆம் திகதியான திங்கட்கிழமையன்று அரச அலுவலகங்களில் நடைபெறும் பொதுமக்கள் தினம் இந்த வாரத்தில் இடம்பெறாது என்று அரச சேவை , மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ள பொதுமக்கள் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment