இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலை முன்னெடுத்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை இது பாரதூரமான விடயம் - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலை முன்னெடுத்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை இது பாரதூரமான விடயம் - விஜித ஹேரத்

மினுவாங்கொடையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான காரணத்தை கண்டறிவதற்காக முழுமையான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஜே.வி.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ஊழியர்கள் கடுமையான விதத்தில் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என தெரிவித்துள்ளது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்கள் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலை முன்னெடுக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது என விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலை முன்னெடுத்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை இது பாரதூரமான விடயம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புதிய கொரோனா வைரஸ் இந்தியாவிலிருந்து வந்த தொழிலாளர்கள் மூலம் பரவியதா அல்லது ஏற்கனவே இங்கு காணப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவில்லை பொதுமக்களிக்கு உரிய பதிலை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment