பேருந்தில் பயணம் செய்த பெண்ணிற்கு கொரோனா - ஏனைய பயணிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிற்கு கொரோனா - ஏனைய பயணிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை

கடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த பேருந்தில் பயணம் ஏனைய 35 பயணிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஒக்டோபர் நான்காம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடவத்தையிலிருந்து காலிக்கு சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை சோதனையின் போது உறுதியாகியுள்ளது.

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர் ஒருவரே இவ்வாறு பேருந்தில் பயணம் செய்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண் காலியை சென்றடைந்த பின்னர் அவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவருடன் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் அவர்களை தங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 

எனினும் பேருந்து சாரதியும் நடத்துனரும் மாத்திரம் தங்களை தொடர்புகொண்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்தலிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

35 பயணிகள் இன்னமும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அவர்களால் சமூகத்திற்கும் ஆபத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment