மீன் சாப்பிடுபவர்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

மீன் சாப்பிடுபவர்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா காணப்படலாம் என்பதால் சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும் போது முகத்தினைக் கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.

அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியினைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாகப் பின்பற்றி மீன் சந்தைகளை தொடர்ந்து நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment