(எம்.எப்.எம்.பஸீர்)
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 124 பேர் நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் தெரிவித்தது.
சமூகத்தில் இருந்து கண்டறியப்பட்ட இந்த 124 தொற்றாளர்களில் மூவர் வைத்தியர்கள் எனவும் அவர்கள் கேகாலை வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்கள் எனவும் அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டது.
ஏனையோரில் மேலும் இருவர் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றொருவர் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் குறிப்பிட்டது.
இந்நிலையில் மினுவாங்கொடை கொரோனா கொத்தணி பரவலின் அபாயம் தற்போது கேகாலையையும் அச்சுறுத்தியுள்ளது. நேற்று இரவு 9.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 39 பேர் மினுவாங்கொடை பிரென்டெக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடைய, தனிமைபப்டுத்தல் முகாம்களில் கண்காணிப்பில் இருந்தோர் ஆவர். ஏனையோரே சமூகத்திலிருந்து கண்டறியப்பட்டவர்களாவர்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த கொரோனா தொறறாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,432 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 3,307 பேர் குணமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment