நகரங்களில் பல்மாடி வாகனத் தரிப்பிடம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

நகரங்களில் பல்மாடி வாகனத் தரிப்பிடம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

(இராஜதுரை ஹஷான்) 

கொழும்பு மற்றும் ஏனைய தெரிவு செய்யப்பட்ட நகரங்ளில் பலமாடி வாகனத் தரிப்பிடம் அமைப்பதன் ஊடாக கலப்பு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு நகரத்திலும், ஏனைய பிரதான நகரங்களிலும் வீதியில் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் ஏற்படும் போதுக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திறந்த போட்டி விலைமனுக் கோரல் செயன்முறைமையைப் பின்பற்றி தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் மூலம் வாகன தரிப்பிடங்களை அமைத்து பராமரிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அரச - தனியார் பங்குடமை கருத்திட்டமாக கொழும்பு நகரத்திலும் பத்தரமுல்லை, அநுராதபுரம், மற்றும் கண்டி, ஆகிய நகரங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 8 இடங்களிலும் பொதுவான முறையில் பல்மாடி வாகனத் தரப்பிடம் மற்றும் இயந்திர வாகனத்தரிப்பிடம் அமைப்பதற்காக தனியார் துறையினரின் யோசனை திட்டங்களை பெறல். 

செயற்திட்டத்துக்காக செலவாகும் நிதி கருத்திட்டத்தின் மூலம் மூற்கூட்டிய விற்பனையின் முலம் திரட்டிக் கொள்ளும் வகையில் வீட்டு அலகுகள், அலுவலக இட வசதிகள் உள்ளிட்ட வேறு பொருத்தமான கருத்திட்டங்களுடன் நாரஹேன்பிடிய, புறக்கோட்டை, ரெலிகொம் வாகனத் தரிப்பிடம், கொழும்பு-07 ஓடஷ் விளையாட்டுக் கழகத்தில் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடம், கொழும்பு-07 கிங்ஷி அவின்யு ஆகிய இடங்களில் பொதுவான முறையில் பல்மாடி வாகனத் தரப்பிடம் மற்றும் இயந்திர வாகனத்தரிப்பிடம் அமைப்பதற்கு தனியார் துறையினரிடம் யோசனை பெறல். ஆகிய இரண்டு பொறமுறையின் கீழ்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment