முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிற்கு பிடியாணை - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிற்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிற்கு கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி தெமட்டகொடையிலுள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே உள்ளிட்ட 10 சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் முதலாவது சாட்சியாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்க, சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment