மாரவில பகுதியைச் சேர்ந்த மீனவருக்கு கொரோனா - திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

மாரவில பகுதியைச் சேர்ந்த மீனவருக்கு கொரோனா - திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகம் இன்று 10 ஆம் திகதி சனிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக டிக்கோவிட்ட மீன்பிடி துறை முகத்தை மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த துறைமுகத்திலிருந்து கடந்த 8 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாரவில பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபர் ஒருவரே இவ்வாறு அடையா ளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 5 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற போது குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பதன் காரணமாக குறித்த நபர் திருப்பி அனுப்பட்ட நிலையில், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நபருக்கு இன்று பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த 5 மீனவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment