தமிழர் பகுதிகளில் அத்துமீறும் சிங்கள குடியேற்றங்கள் - ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்த சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Friday, October 23, 2020

தமிழர் பகுதிகளில் அத்துமீறும் சிங்கள குடியேற்றங்கள் - ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்த சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. 

இச்சந்திப்பு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. 

இதன்போது மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக இரா.சாணக்கியனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள ஊடகப்பிரிவு, வடக்கு, கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லைப்புறக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவது மற்றும் மயிலத்தமடு, மாதவனை பிரதேசங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் தொடர்பான விடயங்களும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் காரணமாக தனது சிறப்புரிமை மீறப்பட்ட விவகாரம் மற்றும் சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இவற்றைச் செவிமடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment