கடற்றொழில் சார் செயற்பாட்டாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

கடற்றொழில் சார் செயற்பாட்டாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர வேண்டுகோள்

நாடளாவிய ரீதியில் கடற் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூக பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் நேற்று (20.10.2020) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று நீக்கிகளை தெளித்து சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று (21.10.2020) பேலியாகொட மீன் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினரின் புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், மக்களின் அன்றாட உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நாடளாவிய ரீதியில் கடற்றொழில் சார் நடவடிக்கைகளை தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அனைவரும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி தொழில் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment