ரயில் பயணிகளின் எண்ணிக்கையில் குறைவு - ரயில் சேவைகளில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

ரயில் பயணிகளின் எண்ணிக்கையில் குறைவு - ரயில் சேவைகளில் மாற்றம்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதினால் நீண்ட தூரங்களுக்கான ரயில்களை இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னான்டோ கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயில், மருதானை வெளியத்த தெற்கு நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் மற்றும் கொழும்பு கோட்டை பொலன்னறுவைக்கிடையிலான புலத்திசி என்ற நகரங்களுக்கிடையிலான ரயில் மீண்டும் அறிவிக்கும் வரையில் சேவையில் ஈடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று கொழும்பு கோட்டை - காங்கேசன்துறைக்கிடையிலான நகரங்களுக்கிடையிலான உத்தரதேவி ரயில் மற்றும் கல்கிசை மற்றும் காங்கேசன்துறை நகரங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் ரயில் வார இறுதியில் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ரயில் சேவைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இடம் இருப்பதாகவும் அவர் கூறினார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும் ரயில் நிறுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார்.

இருப்பினும் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் நிறுத்தப்பட்டு பதுகாப்புடன் அவர்கள் கல்வி நடவடிக்கைகாக பயணிப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment