பிரதமர் மஹிந்த அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திக்காமைக்கான காரணம் இதுதான்! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

பிரதமர் மஹிந்த அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திக்காமைக்கான காரணம் இதுதான்!

(நா.தனுஜா)

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது. அதனாலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்பியோவை சந்திக்கவில்லை என்பதுடன் முன்னரேயே சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கவுமில்லை என்று பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது.

'அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்காமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. உண்மையில் ஆரம்பத்திலேயே பிரதமர் மைக் பொம்பியோவை சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை.

பொம்பியோவின் மிகக்குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது' என்று விளக்கமளித்திருக்கிறார்.

No comments:

Post a Comment