ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வி பயிலும் 2020 - 2021 கல்வி ஆண்டுக்கான புதிய ஆசிரிய மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பு திரும்பப் பெறப்படுவதாக கலாசாலையின் அதிபர் எம்.சி. ஜுனைட் தெரிவித்தார்.
இக்கலாசாலையில் பயிலும் அனைத்து ஆசிரிய மாணவர்களும் ஒக்ரோபெர் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (06.10.2020) காலை 9 மணிக்கு கலாசாலைக்கு வருகை தர வேண்டும் என்று ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.
எனினும் நாட்டில் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் முடக்க நிலை காரணமாக புதிய ஆசிரிய மாணவர்களின் வருகையையும் அவர்தம் கல்வி நடவடிக்கைகளையும் பிற்போட்டுள்ளதாக ஜுனைட் மேலும் தெரிவித்தார்.
புதிய ஆசிரிய மாணவர்களுக்கான வருகை அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று பொது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசரங்களைப் பெற 065 2223368 என்ற கலாசாலை தொடர்பு இலக்கத்துடனோ அல்லது கலாசாலை அதிபரின் 0773632586 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment