வவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

வவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு

வவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாட்டுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூடப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலாளர் சமன் மந்துலசேனவின் வேண்டுகோளுக்கு அமையவே இச்செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்திலும் 12பேர் வரை கொரோனோ தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்தே, அதிகளவான மக்கள் செல்கின்ற இடமான வவுனியா மரக்கறி மொத்த வியாபர நிலையம் முழுமையாக மூடப்பட்டு, தொற்று நீக்கும் செயற்பாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment